ADDED : ஜூலை 15, 2026 09:11 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: பணம் வைத்து சூதாடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம், பனங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார், 41; கார்த்திக், 38; மற்றும் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து செந்தில்குமார், கார்த்திக்கை கைது செய்து விசாரிக்கின்றனர்.
