/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக்கில் சென்றவரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது
/
பைக்கில் சென்றவரை தாக்கிய இரண்டு வாலிபர்கள் கைது
ADDED : ஜூன் 27, 2024 03:03 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக்கில் சென்றவரை தாக்கிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் வி.மருதூர் பகுதியைச் சேர்ந்த கங்காதரன் மகன் ராஜன்பாபு,26; இவர், கடந்த 25ம் தேதி தனது பைக்கில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி, கோலியனூர் பனங்குப்பம் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அதே திசையில் பின்னால் வந்த விழுப்புரம் வில்லியம் லேஅவுட் பகுதியை சேர்ந்த சுந்தர் மகன் சிலம்பரசன்,24; சக்கரவர்த்தி மகன் மோகன், 29; ஆகியோர், முன்னாள் சென்ற ராஜன்பாபுவை, வழிவிடமல் செல்வதாகக்கூறி, தடுத்து நிறுத்தி, திட்டி தாக்கியுள்ளனர். இதுகுறித்து ராஜன்பாபு கொடுத்த புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து, சிலம்பரசன், மோகன் இருவரையும் கைது செய்தனர்.