ADDED : ஜூலை 28, 2024 07:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானூர், ; பைக்கில் இருந்து தவறி விழுந்த டைலர் இறந்தார்.
மரக்காணம் அடுத்த காயல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் பிரபு, 43; டைலர். சேதராப்பட்டில் உள்ள தையல் கடையில் வேலை செய்து வந்த இவர் கடந்த 25ம் தேதி இரவு 8;30 மணிக்கு கடையில் வேலையை முடித்து விட்டு, பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார்.
சேதராப்பட்டு-ஆகாசம்பட்டு சாலையில் சென்றபோது, எதிரே திடீரென வந்த வாகனத்தால், பிரபு ஓட்டிச்சென்ற பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள ஐந்தடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
வானூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.