ADDED : ஆக 02, 2024 02:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் ஒன்றிய கூட்டம் நடந்தது.
ஒன்றிய மன்ற கூடத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கி, காலை உணவு திட்டம் வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசினார். பி.டி.ஓ.,க்கள் சிவசண்முகம், சையத் முகமத் வரவேற்றனர்.
மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேற்கொள்ள வேண்டிய
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.