/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வளத்தியில் வி.சி., ஆலோசனை கூட்டம்
/
வளத்தியில் வி.சி., ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 23, 2024 07:03 AM
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் ஒன்றிய வி.சி., ஆலோசனை கூட்டம் வளத்தியில் நடந்தது.
ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். துணை செயலாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். பொருப்புகுழு ராஜேந்திரன் வரவேற்றார்.துணை செயலாளர் ராஜாராமன் துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் தனஞ்செழியன் சிறப்புரையாற்றினார்.
அக்.2, ல் கள்ளக்குறிச்சியில் நடக்கும் போதை ஒழிப்பு மகளிர் மாநாட்டிற்கு ஒன்றியத்திலிருந்து 50 வாகனங்களில் மகளிர்கள் செல்வது, கிழக்கு ஒன்றிய பொருளாளர் சங்கரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆரணி எம்.பி., தொகுதி செயலாளர் நன்மாறன், மாநில துணை செயலாளர்கள் துரைவளவன், இனியவளவன், அரசு, சிவக்குமார்ஆகியோர் பங்கேற்றனர்.

