/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு ஆபத்து வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் பேச்சு

ADDED : ஏப் 09, 2024 05:16 AM
வானுார்: 'மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைந்தால் அரசியல் அமைப்பு சட்டத்திற்கே ஆபத்து' என வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் பேசினார்.
விழுப்புரம் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் வி.சி., வேட்பாளர் ரவிக்குமார் நேற்று மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்புத்துப்பட்டு, கூனிமேடு குப்பம், அனுமந்தை, ஆலம்பாக்கம், கந்தாடு, புதுப்பாக்கம், நடுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு கேட்டு பேசியதாவது:
இது லோக்சபா தேர்தல் அல்ல. நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம். இதில் நாம் வெற்றி பெற்று நாட்டை காப்பாற்ற இந்த தேர்தலில் 'இண்டியா' கூட்டணியை ஆதரியுங்கள்.
ஏனெனில் இந்தியாவின் பன்முகத்தன்மையை உறுதி செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைக்க பா.ஜ., முற்படுகிறது.
இனி மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்தால் அரசியலமைப்புச் சட்டத்திற்கே ஆபத்தாகும்.
நாட்டில் அதிபர் முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள். எனவே, ஜனநாயகத்தை மீட்டு நமது உரிமைகளை காக்க பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து அகற்றுவோம்.
மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம், விவசாயிகளுக்கு இலவச மும்முனை மின்சாரம் போன்ற நலத்திட்டங்கள் இன்னும் அதிகமாக நமக்கு கிடைக்க 'இண்டியா' கூட்டணியை வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு ரவிக்குமார் பேசினார்.