/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வீரமங்கை
/
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வீரமங்கை
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வீரமங்கை
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை இளம் தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வீரமங்கை
ADDED : ஜூலை 18, 2024 05:28 AM

விழுப்புரம், : விழுப்புரத்தில் வீரமங்கை விருது பெற்ற பெண் சிலம்பம் பயிற்சியாளர் அன்பரசி, அரசு, தனியார் பள்ளி மாணவர்களை சிலம்பம் பயிற்சிக்கு ஊக்குவித்து, அவர்கள் மாநில அளவில் கோப்பைகளை வெல்ல சிறந்த ஊன்றுகோளாக உள்ளார்.
விழுப்புரம் அருகே காவணிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் தனபூபதி. விவசாயி. இவரின் மகள் அன்பரசி. தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் விளையாட்டை கற்று கொள்வதில் சிறு வயது முதல் ஆர்வம் காட்டிய அன்பரசி, கடந்த 2018 ம் ஆண்டு டி.என்.ஆர்.எஸ்., அன்பு சிலம்பம் மற்றும் கராத்தே அறக்கட்டளையை துவக்கினார்.
இவர், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் கற்று தருவதை ஆர்வமாக கொண்டு, பெற்றோரிடம் ஒப்புதல் பெற்று பயிற்சி அளித்தார்.
இவர், தற்போது வரை ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு சிலம்பம் பயிற்சியை கற்று தந்துள்ளார். இதில், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாநில சிலம்பம் போட்டியில் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இது மட்டுமின்றி 100 மாணவர்கள், உலக சாதனை சிலம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். பயிற்சியாளர் அன்பரசிடம் சிலம்பம் கற்று கெண்ட 2 பேர், கண்களை கட்டி கொண்டு சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்துள்ளனர். இது மட்டுமின்றி, பயிற்சியாளர் அன்பரசி, தமிழக அரசின் கலை வளர்மணி விருது, சிலம்பாட்ட வீரமங்கை விருதுகள் பெற்று சாதித்துள்ளார்.
இது மட்டுமின்றி, வீரமங்கை அன்பரசி, அரசு பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக தற்காப்பு கலைகளான சிலம்பம், கராத்தே பயிற்சி அளிக்கிறார். மேலும், இவர், தமிழ்நாடு சிலம்பாட்ட கழக மாவட்ட செயலாளராகவும், நோபல் உலக சாதனை அமைப்பின் நடுவராகவும் உள்ளார். மேலும், இவர், பல்வேறு அமைப்புகளிடம் இருந்து சூப்பர் பெண் விருது, யுவஜி கலாம் பாரதி விருதுகளை பெற்றுள்ளார்.
சிலம்பம் பயிற்சியாளர் அன்பரசி கூறியதாவது,
நான் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், வருங்கால சிறகுகளான மாணவ செல்வங்கள் தற்காப்பு கலையில் சிறக்க எனக்கு தெரிந்ததை கற்று தருகிறேன். இதில், பெண்கள் முக்கிய தற்காப்பு கலையில் சிறக்கும் வகையில் சிலம்பத்தை கற்பிக்கிறேன்.
என் தந்தை என்னை தைரியமாகவும், சுதந்திரமாகவும் விட்டதால் தான், நான் தற்காப்பு கலையில் சாதித்துள்ளேன். இதே போல், மற்றவர்களும் சாதிக்க, பெற்றோர்களிடம் பேசி, பிள்ளைகளுக்கு தற்காப்பு கலையை கற்பிக்கிறேன். என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள், இந்த சான்றிதழ் மூலம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கை, நல்ல அரசு பணிகளிலும் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.