/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேம்பாலம் பாதைகளை திடீரென மூடியதால் வாகனங்கள் ஸ்தம்பிப்பு
/
மேம்பாலம் பாதைகளை திடீரென மூடியதால் வாகனங்கள் ஸ்தம்பிப்பு
மேம்பாலம் பாதைகளை திடீரென மூடியதால் வாகனங்கள் ஸ்தம்பிப்பு
மேம்பாலம் பாதைகளை திடீரென மூடியதால் வாகனங்கள் ஸ்தம்பிப்பு
ADDED : ஏப் 11, 2024 04:54 AM
விழுப்புரம்: ஜானகிபுரம் மேம்பாலத்தில் பாதைகளை திடீரென மூடியதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
விழுப்புரம், ஜானகிபுரம் மேம்பாலம் வழியாக ஜானகிபுரம், காவணிப்பாக்கம், சுந்தரிபாளையம், வளவனுார் மற்றும் திருச்சி, சென்னை பைபாஸ் சாலைக்கு செல்லும் பாதைகள் அமைக்கப்பட்டன.
இதனிடையே ஜானகிபுரம் மேம்பாலத்தின் வழியாக ஜானகிபுரம், காவணிப்பாக்கம், சுந்தரிபாளையம், வளவனுார் பகுதிகளுக்கு செல்லும் பாதைகளை, சாலை பணியில் ஈடுபட்டுள்ள கான்டிராக்ட் நிர்வாகத்தினர் ராட்சத கற்களை கொண்டு நேற்று அதிகாலை 3.00 மணிக்கு திடீரென மூடினர்.
இதனால், இந்த வழியாக விழுப்புரம் நகர பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. ஜானகிபுரம், கண்டமானடி கிராம மக்கள் கான்ட்ராக்ட் நிர்வாகத்தினிடம் வாக்குவாதம் செய்தனர்.
தகவலறிந்த விழுப்புரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, கான்ட்ராக்ட் நிர்வாகத்திடம் பேசினர். அவர்கள், நான்கு வழிச்சாலையை இணைக்கும் ஜானகிபுரம் மேம்பாலம் பணிகள் முடிவடைந்ததற்கான பணி சான்றிதழ் தர, நகாய் அதிகாரிகள் இழுத்தடிப்பதால் பாதைகளை மூடியதாக தெரிவித்தனர்.
மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, தீர்வு காண வேண்டும் என்றும், பொதுமக்கள் செல்லும் பொது பாதைகளை அடைக்கக் கூடாது என போலீசார், தெரிவித்து, காலை 8.00 மணிக்கு மேல் பாதைகளில் உள்ள கற்களை ஜே.சி.பி., மூலம் அகற்றினர். இதையடுத்து அவ்வழியாக வாகனங்கள் சென்றன.

