/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ் புதிய கிளை திறப்பு விழா
/
வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ் புதிய கிளை திறப்பு விழா
ADDED : மார் 10, 2025 06:06 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரியில் 42 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வீட்சின் 7வது கிளை விழுப்புரத்தில் திறக்கப்பட்டது.
விழுப்புரம் நேருஜி சாலை, காந்தி சிலை அருகே நடந்த புதிய கிளை திறப்பு விழாவிற்கு, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வீட்ஸ் நிறுவனர் அழகர்சாமி தலைமை தாங்கினார்.
மேலாண் இயக்குனர் வெங்கடசுப்ரமணியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினர் புதுச்சேரி ஓஷன் ஸ்பிரே நிறுவன மேலாண் இயக்குனர் நவீன் பாலாஜி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
புதிய கிளையில் பாரம்பரிய பலகாரங்கள் மற்றும் பில்டர் காபி, ராகி அடை, தவல அடை, நவதானிய சுண்டல், சுய உருண்டை, உப்பு உருண்டை, கிழங்கு உருண்டை, வெண்ணை புட்டு, இலை கொழுக்கட்டை, பிடி கொழுக்கட்டை மற்றும் சுவையான இனிப்பு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.