/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விஜயகாந்த் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
/
விஜயகாந்த் பிறந்த நாள் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஆக 26, 2024 12:25 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.
மறைந்த தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டிவனம் நகரம் சார்பில் காமராஜர் சிலை அருகே நடந்த விழாவிற்கு, நகர செயலாளர் காதர்பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர்கள் வெங்கடேசன், சுந்தரேசன் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், விஜயகாந்த் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில், பிரகாஷ், சஞ்சீவி, வெங்கடேசன், கனகராஜ், நடராஜன், துரை, கார்த்திக், முஸ்தபா, வெற்றிவேந்தன், பாஸ்கர், சேதுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.