/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பு மனுக்கள் ஏற்பு
/
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பு மனுக்கள் ஏற்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பு மனுக்கள் ஏற்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 29 வேட்பு மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூன் 25, 2024 06:38 AM

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் 29 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட கடந்த 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை மொத்தம் 64 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நேற்று காலை 11:00 மணிக்கு தேர்தல் பொதுபார்வையாளர் அமித்சிங் பன்சால் முன்னிலையில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் பரிசீலிக்கப்பட்டது. அதில், தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்ளிட்ட 29 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டு, பிற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனைக் கண்டித்து சுயேச்சை வேட்பாளர்களான செல்வி, விநாயகம், இசக்கிமுத்து, கோவிந்தராஜ், முத்துக்குமார் உள்ளிட்டோர், தங்கள் மனுக்களை தேர்தல் நடத்தும் அலுவலர் வேண்டுமென்றே நிராகரித்ததாக கூறி தர்ணாவில் ஈடுபட்டனர்.
அதேபோன்று மாற்றுத்திறனாளி வேட்பாளர் பாலகிருஷ்ணன், தங்களுக்கு உரிய சாய்தள (ரேம்ப்) வசதி ஏற்படுத்தவில்லை எனக் கூறி தர்ணாவில் ஈடுபட்டார். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர்.
மனுக்கள் வாபஸ் பெற நாளை 26ம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.