/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் தொகுதி தேர்தல் பணிகள் பொது பார்வையாளர் ஆய்வு
/
விழுப்புரம் தொகுதி தேர்தல் பணிகள் பொது பார்வையாளர் ஆய்வு
விழுப்புரம் தொகுதி தேர்தல் பணிகள் பொது பார்வையாளர் ஆய்வு
விழுப்புரம் தொகுதி தேர்தல் பணிகள் பொது பார்வையாளர் ஆய்வு
ADDED : மார் 28, 2024 11:01 PM
விழுப்புரம்: லோக்சபா தேர்தலை யொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பணிகள் குறித்து விழுப்புரம் (தனி) தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அகிலேஷ் குமார், தேர்தல் காவல் துறை பார்வையாளர் திரேந்திர சிங் குஞ்சியால் ஆகியோர் கேட்டறிந்தனர்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் லோக்சபா தேர்தலை யொட்டி, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து பார்வையிட தேர்தல் பொது பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா, தேர்தல் காவல்துறை பார்வையாளர் திரேந்திர சிங் குஞ்சியால் ஆகியோர் நேற்று வந்தனர்.
அவர்களிடம், மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி, விழுப்புரம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளின் விபரம், ஓட்டுச்சாவடி மையங்களின் எண்ணிக்கை, தேர்தல் நன்னடத்தை விதிகள், தேர்தல் விழிப்புணர்வ பணிகள், ஓட்டுப் பதிவு அலுவலர்கள், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை உட்பட பல்வேறு தேர்தல் பணிகள் குறித்து கூறினார்.
முன்னதாக, தேர்தல் பொது பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா, தேர்தல் காவல்துறை பார்வையாளர் திரேந்திர சிங் குஞ்சியால், தேர்தல் செலவின பார்வையாளர் ராகுல் சிங்கானியா ஆகியோரை மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி பூங்கொத்து வழங்கி வரவேற்றார். எஸ்.பி., தீபக்சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

