/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் மருதுார் சுடுகாடு பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

ADDED : மே 28, 2024 11:30 PM

விழுப்புரம் : விழுப்புரம் மருதுார் சுடுகாடு பகுதியில், பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையில், வி.மருதுார் பகுதிக்கான சுடுகாடு அமைந்துள்ளது.
இந்த சுடுகாடு மருதுார், கிழக்கு சண்முகபுரம் காலனி, ரயில்வே காலனி, காலேஜ் நகர் உள்ளிட்ட 10 வார்டுகளை சேர்ந்த பொது மக்கள், இறுதி சடங்கிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் நகராட்சி சார்பில், பாதாள சாக்கடைக்கான சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நேற்று காலை ஜேசிபி மூலம் பணிகளை துவக்கினர்.
தகவல் அறிந்த அப்பகுதி பொது மக்கள், அ.தி.மு.க., நகர செயலாளர் பசுபதி, எம்.ஜி.ஆர்., மன்றம் அற்புதவேல் உள்ளிட்டோர் தலைமையில், பிற்பகல் 1.30 மணிக்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுடுகாட்டில் எவ்வித அறிவிப்புமின்றி, கல்லறைகள், மரங்களையும் அகற்றியதைக் கண்டித்தும், பணியை தடுத்து நிறுத்தியும், ஜேசிபி எந்திரத்தை சிறைபிடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பணியை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: 10 வார்டு மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டில், எவ்வித அறிவிப்புமின்றி, பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதனால், சுடுகாடு இடமும் போவதோடு, சுற்றுப்பகுதி நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் என்பதால், இங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அனுமதிக்க மாட்டோம். சுத்திகரிப்பு நிலைய பணிகள் நடந்தால், மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றனர். அங்கு வந்த விழுப்புரம் டவுன் போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.