/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க., ஆட்சியில்தான் விழுப்புரம் முன்னேறியது: அமைச்சர் பொன்முடி பெருமிதம்
/
தி.மு.க., ஆட்சியில்தான் விழுப்புரம் முன்னேறியது: அமைச்சர் பொன்முடி பெருமிதம்
தி.மு.க., ஆட்சியில்தான் விழுப்புரம் முன்னேறியது: அமைச்சர் பொன்முடி பெருமிதம்
தி.மு.க., ஆட்சியில்தான் விழுப்புரம் முன்னேறியது: அமைச்சர் பொன்முடி பெருமிதம்
ADDED : ஜூலை 01, 2024 06:17 AM

விக்கிரவாண்டி : 'விழுப்புரம் மாவட்டம் முன்னேறியது தி.மு.க., ஆட்சியில்தான்' என அமைச்சர் பொன்முடி பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதி கோலியனுார், மேற்கு ஒன்றியம், ஸ்டாலின் நகர், இந்திரா நகர், விராட்டிகுப்பம், கொட்டபாக்கத்துவேலி, அயினம்பாளையம், திருவாமாத்துார், தென்னமாதேவி ஆகிய இடங்களில் தி.மு.க., வேட்பாளர் சிவாவை ஆதரித்து அமைச்சர் பொன்முடி பேசுகையில், 'விழுப்புரம் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாமல் பின்தங்கி இருந்தது.
தற்போது விழுப்புரத்தில் அண்ணா பொறியியல் கல்லுாரி, மருத்துவக் கல்லுார், புதிய பஸ் நிலையம், அரசு பெருந்திட்ட வளாகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அனைத்தும் தி.மு.க., ஆட்சியில் தான் செய்யப்பட்டது.
தி.மு.க., எப்போது ஆட்சியில் இருக்கிறதோ அப்போதெல்லாம் விழுப்புரம் மாவட்டம் வளர்ந்து கொண்டிருக்கிறது.
மாவட்டத்தில் மேலும் பல வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற வேட்பாளர் சிவா வெற்றி பெற உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போட்டு அதிக வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்' என்றார்.
அமைச்சர்கள் பெரியசாமி, சாரங்கபாணி, மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், எம்.எல்.ஏ.,க்கள் பர்கூர் தொகுதி மதியழகன், கிருஷ்ணகிரி பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் புஷ்பராஜ் , முருகன்.ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, முருகவேல், எக்கூர் ஒன்றிய செயலாளர்கள் செல்வம், ரகுநாத், திவாகர், நகர செயலாளர் நவாப், மாவட்ட துணைச் செயலாளர் இளந்திரையன், இளைஞரணி அமைப்பாளர் தினகரன், தலைமை செயற்குழு செந்தில்.
மாவட்ட துணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்ட பொருளாளர் கதிரவன், வி.சி., மாவட்ட செயலாளர் பெரியார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.