/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பள்ளி மாணவிக்கு இளம் சாதனையாளர் விருது
/
விழுப்புரம் பள்ளி மாணவிக்கு இளம் சாதனையாளர் விருது
விழுப்புரம் பள்ளி மாணவிக்கு இளம் சாதனையாளர் விருது
விழுப்புரம் பள்ளி மாணவிக்கு இளம் சாதனையாளர் விருது
ADDED : பிப் 27, 2025 07:44 AM

விழுப்புரம், ;விழுப்புரத்தை சேர்ந்த மாணவிக்கு இளம்சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
விழுப்புரம் பி.என்.தோப்பு நகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவி சுபஸ்ரீ. பிளஸ் 2 பயிலும் இவர், காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி.
சர்வதேச ஆசிய பசிபிக் காது கேளாதோர் தடகள போட்டியில் பங்கேற்ற சுபஸ்ரீ, 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம், 4×100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர், ஏற்கனவே தேசிய தடகள போட்டியில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 4×100 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்க பதக்கம் வென்றுள்ளார். மாணவிக்கு பள்ளி உடற்கல்வி இயக்குநர் தமிழரசன், உடற்கல்வி ஆசிரியர் சோபியா பயிற்சி அளித்து வருகின்றனர்.
இவர்கள் மூவருக்கும், சென்னையில் அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் நல்லமணி தலைமை தாங்கினார்.
விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவி சுபஸ்ரீயை பாராட்டி இளம் சாதனையாளர் விருதும், பல்வேறு மாணவர்களை ஊக்கப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் சோபியா, உடற்கல்வி இயக்குனர் தமிழரசன் ஆகியோருக்கு, நல்லாசிரியர் விருதுகளும் வழங்கப்பட்டது.
இதனை திரைப்பட இயக்குனர் பாக்யராஜ், தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் மதுரை முத்து ஆகியோர் வழங்கினர்.