/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி விழுப்புரம் மாணவர்கள் இரண்டாமிடம்
/
மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி விழுப்புரம் மாணவர்கள் இரண்டாமிடம்
மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி விழுப்புரம் மாணவர்கள் இரண்டாமிடம்
மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி விழுப்புரம் மாணவர்கள் இரண்டாமிடம்
ADDED : ஆக 22, 2024 12:04 AM

விழுப்புரம் : ஓசூரில் மாநில அளவில் நடந்த இறகுப் பந்து போட்டியில், விழுப்புரம் மாவட்ட மாணவர்கள், இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்று சாதித்தனர்.
ஓசூரில் மாநில அளவிலான இறகுபந்துப் போட்டிகள், கடந்த 18ம் தேதி தொடங்கி இரண்டு நாள்கள் நடந்தது.
இந்த போட்டியில் சென்னை, விழுப்புரம், கடலுார் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலுார் , தர்மபுரி உள்ளிட்ட தமிழக முழுவதும் இருந்தும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் இறகுப் பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றனர்.
இதில், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து, விழுப்புரம் சதா பேட்மிட்டன் அகாடமியை சேர்ந்த 6 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த மாநில அளவிலான போட்டியில், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில், விழுப்புரம் மாவட்டம் சார்பில் பங்கேற்ற மாணவர்கள் கோவிந்தகிருஷ்ணன், நிதிஷ் இணையர் சிறப்பாக விளையாடி, இரண்டாம் இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர்.
அவர்களுக்கு, இரண்டாமிடத்துக்கான பரிசு கோப்பை, சான்றிதழ், வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது. பதக்கம் வென்று வந்த இவர்களை, விழுப்புரம் இறகுப் பந்தாட்டக் கழக பயிற்றுனர் சதாசிவம்பாபு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.