/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டில்லியில் நடந்த தேசிய கராத்தே போட்டி; விழுப்புரம் மாணவர்கள் தங்கம் வென்று சாதனை

ADDED : ஆக 08, 2024 12:22 AM

விழுப்புரம் : சுதந்திரதினத்தையொட்டி டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், விழுப்புரம் மாணவர்கள் தங்கம், வெண்கல பதக்கங்களை வென்று சாதித்தனர்.
நாட்டின் சுதந்திர தின விழாவினையொட்டி, டெல்லியில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடந்தது. தால்கட்ரோ உள் விளையாட்டரங்கில் கடந்த ஆக.1ம் தேதி தொடங்கி 4ம் தேதி வரை போட்டிகள் நடந்தது. ஜீனியர், சீனியர் என 3 பிரிவுகளில் தனித்தனியாக நடந்த போட்டிகளில், தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட 21 மாநிலங்களிலிருந்து கராத்தே வீரர், வீராங்கனைகள் பலர் கலந்துகொண்டனர்.
இதில், விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் இயங்கி வரும் செய்கோ சாயி கராத்தே பயிற்சி மையத்திலிருந்து, கராத்தே பயிற்சியாளர் ரென்ஷி பழனிவேல் தலைமையில், விழுப்புரம் சுற்று பகுதிகளை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 11 கராத்தே மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில், சீனியர் பிரிவில் தருண், தேவநாதன் ஆகியோர் முதலிடம் பிடித்து தங்க பதக்கத்தையும், கேடட் பிரிவில் யுகேஷ், சசிதரன், விஷ்ணுகுமார் ஆகியோர் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கத்தையும் பெற்றனர். பதக்கம் பெற்ற இவர்கள், ரயில் மூலம் நேற்று முன்தினம் விழுப்புரம் வந்தனர். இவர்களை கரேத்தே சங்க தலைவர் விநாயகமூர்த்தி, பொதுச்செயலர் மனோகரன், இணை செயலர் அரவிந்தன் உள்ளிட்டோர் நேற்று ரயில் நிலையத்தில் வரவேற்று, பாராட்டினர்.