/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தேர்தல் விதிமுறை மீறல் பா.ம.க., நிர்வாகி மீது வழக்கு
/
தேர்தல் விதிமுறை மீறல் பா.ம.க., நிர்வாகி மீது வழக்கு
தேர்தல் விதிமுறை மீறல் பா.ம.க., நிர்வாகி மீது வழக்கு
தேர்தல் விதிமுறை மீறல் பா.ம.க., நிர்வாகி மீது வழக்கு
ADDED : ஏப் 10, 2024 01:08 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் தேர்தல் விதி முறை மீறி கட்சிக் கொடி, தோரணங்களைக் கட்டியதாக பா.ம.க., தொழிற் சங்க நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம், தந்தை பெரியார் நகர் பகுதியில், நேற்று காலை பா.ம.க., வேட்பாளர் முரளிசங்கரை ஆதரித்து, அக்கட்சியினர் பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது, அனுமதியின்றி பா.ஜ., மற்றும் பா.ம.க., கூட்டணி கட்சிக் கொடி, தோரணங்களை கட்டியிருந்தது குறித்து, விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் புகார் அளித்தார்.
அதன்பேரில், விழுப்புரம் தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த முன்னாள் அரசு போக்குவரத்துக் கழக பா.ம.க., தொழிற்சங்க செயலாளர் ராமர், 65; மீது, தேர்தல் விதிமீறல் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.