sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வி.கே.டி., சாலையில் வாகன ஓட்டிகளை மிரட்டும் மெகா சைஸ் பள்ளங்கள்

/

வி.கே.டி., சாலையில் வாகன ஓட்டிகளை மிரட்டும் மெகா சைஸ் பள்ளங்கள்

வி.கே.டி., சாலையில் வாகன ஓட்டிகளை மிரட்டும் மெகா சைஸ் பள்ளங்கள்

வி.கே.டி., சாலையில் வாகன ஓட்டிகளை மிரட்டும் மெகா சைஸ் பள்ளங்கள்


ADDED : மே 30, 2024 04:28 AM

Google News

ADDED : மே 30, 2024 04:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி- - கும்பகோணம் - தஞ்சாவூர்(வி.கே.டி., ) சாலை பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும்சிரமத்துக்குள்ளாகிவருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து, கும்பகோணம் வழியாக, தஞ்சாவூர் வரையிலான 165 கி.மீ., துார தேசிய நெடுஞ்சாலையை (வி.கே.டி., சாலை), நான்கு வழிச்சாலையாக (என்.எச். 45 சி) மாற்றுவதற்கு, கடந்த 2018ம் ஆண்டில் ரூ.2,566.10 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது.

இந்த பணிகளை விரைந்து முடிக்க ஏதுவாக, 3 பிரிவுகளாக பிரித்து டெண்டர் விடப்பட்டது. அதில், விக்கிரவாண்டி - சேத்தியாத்தோப்பு பின்னலூர் வரை 66 கி.மீ., துார சாலை பணி, ரூ.711 கோடிக்கு, மும்பை ரிலையன்ஸ் இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது.

அதேபோன்று, சேத்தியாத்தோப்பு பின்னலுார் - சோழபுரம் வரையிலான 51 கி.மீ., துார சாலை பணி ரூ.956.23 கோடிக்கும், சோழபுரம் - தஞ்சாவூர் வரையிலான 48 கி.மீ., துாரத்துக்கான சாலை பணி ரூ. 918.87 கோடிக்கும், வதோதராவை சேர்ந்த படேல் இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டது.

இந்த பணிகளை, டெண்டர் எடுத்த நிறுவனங்கள் 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என நகாய் ஒப்பந்தம் செய்திருந்தது.

பணம் பட்டுவாடாவில் சிக்கல்


இதில், படேல் இன்ப்ராஸ்ட்ரெக்சர் நிறுவனம், பின்னலூர் வாலாஜா ஏரி முதல், தஞ்சாவூர் வரையிலான 99 கி.மீ., துார சாலைப் பணியை 95 சதவீதம் முடித்துள்ளது. ஆனால், விக்கிரவாண்டி- சேத்தியாத்தோப்பு பின்னலுார் வரையிலான 66 கி.மீ., துார சாலை பணியை டெண்டர் எடுத்த மும்பை ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாக பணியை செய்ய போதிய தொழில்நுட்ப கருவிகள் இல்லாததாலும், பணிகளை விரைந்து முடிப்பதற்காகவும், திரிவேணி முத்ரா, வி.பி.ஜி.ஆர்., இன்ப்ராஸ்ட்ரெக்சர், கற்பக விநாயகர் இன்ப்ராஸ்ட்ரெக்சர், எஸ்.எஸ். இன்ப்ராஸ்ரெக்சர் ஆகிய நிறுவனங்களுக்கு சப் காண்ட்ராக்ட் விட்டது.

இந்த சப் காண்ட்ராக்ட் நிறுவனங்கள், தங்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்களுக்கே ஒப்பந்தம் தந்து சாலை பணிகளை மேற்கொண்டன. இவர்கள் பகுதி, பகுதியாக செய்து முடித்த பணிகளுக்கான தொகையை, சப் காண்ட்ராக்ட் நிறுவனங்கள், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பெற்றுக் கொண்டனர். ஆனால், தங்களிடம் வேலை செய்தவர்களுக்கு பணத்தை வழங்கவில்லை. மேலும், புதிய ஒப்பந்ததாரர்களை அழைத்து வந்தனர்.

விடுபட்ட பகுதிகளில் சாலை பணிகளை துவக்க புதிய ஒப்பந்ததாரர்கள் வந்ததை அறிந்த, ஏற்கனவே வேலை செய்தவர்கள் தங்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்கிவிட்டு பணியை துவங்குமாறு கூறி தடுத்து நிறுத்தியதால், சாலை பணிகள் தடைபட்டுள்ளது.

மேலும், சாலை அமைக்க டெண்டர் விட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், மூலப்பொருட்களின் விலை மற்றும் கூலி உயர்வாலும் பணிகள் முடங்கியுள்ளது.

தொடரும் விபத்துகளால் பீதி


கோலியனுார், பண்ருட்டி, வடலுார் ரயில்வே மேம்பால பணிகள், நெய்வேலி ஆர்ச் கேட், வடக்குத்து மேம்பால பணிகள் மற்றும் பண்ருட்டி, வடலுார் புறவழிச்சாலை பணிகள், கடந்த 2019ல் பில்லர் போட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி - பின்னலுார் வரையிலான 66 கி.மீ., துார நான்கு வழிச்சாலை விரிவாக்க பணி துவங்கி 6 ஆண்டிற்கு மேலாகியும் முடிவுக்கு வராத நிலையில், ஏற்கனவே போடப்பட்ட சாலைகளில் ஆங்காங்கே மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக, கப்பியாம்புலியூர் - வாணியம்பாளையம், சின்னகள்ளிப்பட்டு மேம்பாலம், பண்ருட்டி அடுத்த ராசாபாளையம், சித்திரைச்சாவடி, காடாம்புலியூர், கொஞ்சிக்குப்பம், வடலுார் மற்றும் பின்னலுார் மேம்பால இணைப்பு சாலை பகுதிகளில் ஏற்பட்டுள்ள மெகா பள்ளங்களில் வாகனங்கள் விழுந்து விபத்தில் சிக்குவதும், அதனால், உயிரிழப்புகள் ஏற்படுவதும், பலர் காயமடைவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

'நகாய்' கவனிக்குமா?


போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த வி.கே.டி., சாலைக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

எனவே, நகாய் அதிகாரிகள் தற்போது எழுந்துள்ள பிரச்னைகளை சரி செய்து, பணிகளை மீண்டும் துவக்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us