நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த வாலிபால் போட்டியில், பொம்மையார்பாளையம் அணி முதல் இடத்தைப் பிடித்தது.
திண்டிவனத்தில் உள்ள யூனியன் கிளப் மைதானத்தில், திண்டிவனம் கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடந்தது.
இதில் ஓபன் பிரிவில் விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த 44 அணிகள் பங்கேற்றன.
இறுதிப் போட்டியில் முதல் இடத்தை பொம்மையார்பாளையம் அணியும், இரண்டாவது இடத்தை திண்டிவனம் கைப்பந்து கழக அணியும், மூன்றாவது இடத்தை புதுச்சேரி அணியும் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு முறையே 25, 20, 15 ஆயிரம் ரூபாய் என பரிசும் கோப்பையையும் மணிலா நகர் அரிமா சங்க நிர்வாகி சுரேஷ் வழங்கினார்.
போட்டிக்கான ஏற்பாடுகளை திண்டிவனம் கைப்பந்து கழகத்தின் தலைவர் கஜபதி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.