/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வலர் பணி: விண்ணப்பம் வரவேற்பு
/
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வலர் பணி: விண்ணப்பம் வரவேற்பு
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வலர் பணி: விண்ணப்பம் வரவேற்பு
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னார்வலர் பணி: விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 03, 2024 12:07 AM
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தற்காலிகமாக பணிபுரிய சட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்ட தன்னார்வலர்களாக தற்காலிகமாக பணிபுரிய நேர்முக தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 18 வயதுக்கும் மேற்பட்ட ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தோர் விண்ணப்பிக்கலாம்.
அவர்களில் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், டாக்டர்கள், சட்டக்கல்லுாரி மாணவர்கள் (வழக்கறிஞராக பதியும் வரை), அரசு சாரா அமைப்பைச் சேர்ந்தோர். அரசியல் அல்லாத உறுப்பினர்கள், சுற்றுப்புற குழுக்களின் பெண் உறுப்பினர்கள், சுயஉதவி குழுக்களை சேர்ந்தோர் சட்ட தன்னார்வலர்களாக தகுதியுடையவர் ஆவர்.
சட்ட தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பிப்போர், தங்களின் பெயர், முகவரி, படிப்பு மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண், சமீபத்தில் எடுத்த புகைப்படம் ஆகியவற்றை தனித்தாளில் எழுதி (அரசால் வழங்கிய தேவையான இணைப்புகளோடு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் நகல்களில் சுய கையெழுத்திட்ட நகல்களோடு) தலைவர் / முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விழுப்புரம் என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது dlsavillupuram@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமோ அல்லது பதிவு அஞ்சல் மூலமோ வரும் 15ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
சட்ட தன்னார்வலர்களாக தேர்வானோர், விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிலும் கள்ளக்குறிச்சி, திண்டிவனம், செஞ்சி, உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், சங்கராபுரம், வானுார், விக்கிரவாண்டி ஆகிய நீதிமன்றங்களில் உள்ள சட்டப்பணிகள் குழுக்களில் பணிபுரிய வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து தற்காலிக பணியில் அமர்த்தப்படுவர். பணிபரியும் நாட்களுக்கான மதிப்பூதியம் அளிக்கப்படும்.
நேர்முக தேர்வு வரும் 28ம் தேதி மாலை 3:00 மணிக்கு விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, தேர்வு குழுவினர் மூலம் நடைபெறும்.