/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நந்தன் கால்வாய் திட்டம் செயல்பட தி.மு.க.,வுக்கு ஓட்டு போடுங்கள் அமைச்சர் நேரு பேச்சு

ADDED : ஜூலை 04, 2024 12:37 AM

விக்கிரவாண்டி : 'விக்கிரவாண்டி தொகுதியில் விவசாயிகள் பயன் பெறும் திட்டமான நந்தன் கால்வாய் திட்டத்தை முழுமையாக செயல்படுத்திட தி.மு.க.,விற்கு ஓட்டளியுங்கள்' என அமைச்சர் நேரு பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., வேட்பாளர் சிவாவை ஆதரித்து காணை மத்திய ஒன்றியம், வினாயகபுரம், தர்மாபுரி, அதனுார், சூரப்பட்டு, அரும்புலி, ஆதியூர், சாணிமேடு, வெங்கந்துார், வாழப்பட்டு, அகரம், சித்தாமூர் ஆகிய இடங்களில் தேர்தல் பிரசார கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசுகையில், 'தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் முதல்வர், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். விவசாயம் பிரதான தொழிலாக உள்ள இந்த தொகுதியில் நந்தன் கால் வாய் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது.
இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்திட தி.மு.க.,விற்கு, ஓட்டளித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன்' என்றார்.
ஒன்றிய செயலாளர் முருகன், சேர்மன் கலைச்செல்வி, மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் ,செல்வகணபதி எம்.பி., மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.