/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 04, 2024 12:59 AM

கண்டாச்சிபுரம்: மணம்பூண்டி ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்றது.
முகையூர் ஒன்றியம் மணபூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்றன.நிகழ்ச்சிக்கு முகையூர் பி.டி.ஓ., ஷண்முகம் தலைமை தாங்கினார். மேனேஜர் பவனேஸ்வரி மற்றும் வட்டார மகளிர் இயக்க நிர்வாகி புவனேஸ்வரி முன்னிலை வகித்தனர்.
மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ருக்மணி, அமுதா, கல்பனா, சாந்தி, புஷ்பா மேற்பார்வையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு பி.டி.ஓ., ஷண்முகம் விளக்கினார்.தொடர்ந்து அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கோலப்போட்டிகள் நடைபெற்றது.இதில் மகளிர் சுயுதவிக்குழவினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

