/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு பணி
/
ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒதுக்கீடு பணி
ADDED : மார் 22, 2024 10:15 PM

விழுப்புரம் : லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் பணிக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் கட்டமாக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, தொகுதி தேர்தல் செலவின பார்வையாளர் சித்தரஞ்சன் தாங்கடா மஜ்ஹி, மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தலைமை தாங்கினர்.
மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானுார், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலுார் தொகுதிகளில் உள்ள மொத்தம் 2,356 ஓட்டுப்பதிவு கருவி, 2,356 கட்டுப்பாட்டு கருவி, 2,553 ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் கருவி ஆகிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) சரஸ்வதி உட்பட பலர் பங்கேற்றனர்.

