ADDED : மார் 07, 2025 04:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டாச்சிபுரம் : காடகனுார் ஊராட்சிவரை பஸ் இயக்கக் கோரி மா.கம்யூ., சார்பில், கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்டக் குழு உறுப்பினர் வேல்மாறன் தலைமை தாங்கினார். கண்டாச்சிபுரம் வட்ட செயலாளர் கணபதி முன்னிலை வகித்தார். போராட்டத்தில் காடகனுார் ஊராட்சிக்கு பஸ் இயக்கக் கோரியும், வீரபாண்டி ஊராட்சியில் அரசுக்கு இடம் கொடுத்தவருக்கு பட்டா வழங்கவும் வலியுறுத்தினர்.
வட்டக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், தமிழ்செல்வன், முருகன், ஏழுமலை, பழனி உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.