/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மருத்துவமனை முன்பு தண்ணீர் பந்தல் திறப்பு
/
அரசு மருத்துவமனை முன்பு தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : மார் 10, 2025 09:55 PM

செஞ்சி: அரசு மருத்துவமனை முன்பு தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
செஞ்சி அரசு மருத்துவமனை முன்பு நகர தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது. நகர செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மேன் விஜயகுமார் முன்னிலை வகித்தார். பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி வரவேற்றார்.
வடக்கு மாவட்ட செயலாளர் மஸ்தான் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.
அரசு வழக்கறிஞர் தமிழ்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர் பொன்னம்பலம், முன்னாள் கவுன்சிலர் ஜெயா முனுசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் சேகர், இளைஞரணி சூரியா, நிர்வாகிகள் தனசேகரன், செல்லன் கலந்து கொண்டனர்.