sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நாங்கள் என்ன கறிவேப்பிலையா... பிரசாரங்களில் எங்களை அழைப்பதில்லை புறக்கணிக்கப்படுவதாக காங்., கட்சியினர் 'அப்செட்'

/

நாங்கள் என்ன கறிவேப்பிலையா... பிரசாரங்களில் எங்களை அழைப்பதில்லை புறக்கணிக்கப்படுவதாக காங்., கட்சியினர் 'அப்செட்'

நாங்கள் என்ன கறிவேப்பிலையா... பிரசாரங்களில் எங்களை அழைப்பதில்லை புறக்கணிக்கப்படுவதாக காங்., கட்சியினர் 'அப்செட்'

நாங்கள் என்ன கறிவேப்பிலையா... பிரசாரங்களில் எங்களை அழைப்பதில்லை புறக்கணிக்கப்படுவதாக காங்., கட்சியினர் 'அப்செட்'


ADDED : மார் 30, 2024 06:24 AM

Google News

ADDED : மார் 30, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : காங்கிரசுக்கு தேசிய கட்சி என்ற மரியாதையை தி.மு.க., தலைமை மதித்து அரவணைத்து 10 தொகுதிகளை வழங்கினாலும், மாவட்ட அளவில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் மதிப்பளிக்கவில்லை என புலம்புகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், தி.மு.க.,வினர் தங்களை மதிப்பதில்லை. எந்த ஒரு நிகழ்ச்சிக்கம் கூட்டணி கட்சி என்ற முறையில் அழைப்பு விடுப்பதும் இல்லை என, சில மாதங்களாக காங்., கட்சியினர் புலம்பி வருகின்றனர். லோக்சபா தேர்தல் அறிவித்து பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையிலும் கூட முக்கியத்துவம் கொடுக்காதது அவர்களை மேலும் 'அப்செட்' ஆக்கியுள்ளது.

இதுகுறித்து காங்., மாவட்ட நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

மத்திய பா.ஜ., அரசு கொண்டுவந்த வேளாண் தடை சட்டம், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடந்த போராட்டம், சி.ஏ.ஏ.,வுக்கு எதிரான போராட்டங்கள், விழுப்புரத்தில் நடந்தபோது, காங்கிரசுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

போராட்டம் நடக்கும் நேரத்தில், போனில் சொல்வார்கள். தி.மு.க.,வினருக்கு நெருங்கிய பழைய நிர்வாகி ஒன்றிரண்டு பேரை மட்டும் அழைத்துக் கொள்வார்கள். இருந்தாலும் கூட்டணி ஒற்றுமை கருதி நாங்கள் ஒவ்வொரு முறையும் சென்று பங்கேற்று இருக்கின்றோம்.

தற்போது லோக்சபா தேர்தல் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், எந்த ஒரு பணிக்கும், எங்களை அவர்கள் அழைக்கவில்லை.

விழுப்புரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் உள்ள வி.சி., கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் போட்டியிடுகிறார். அவர்கள் செயல் வீரர்கள் கூட்டம் நடத்தினர். பிரசார கூட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதற்கு கூட எங்களுக்கு அழைப்பில்லை.

வி.சி., தலைவர் திருமாவளவன் நேற்று விழுப்புரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அதற்கு கூட முன்பே அழைக்கவில்லை. மாவட்ட தலைவர் சீனிவாசகுமார் வெளியூர் சென்று இருந்ததால், அவரால் வர முடியவில்லை. இருந்தாலும் நகர, தொகுதி நிர்வாகிகள் சிலர் பங்கேற்றனர். மேலும், தி.மு.க., நிர்வாகிகள் மட்டும் பிரசார வாகனத்தில் இருந்தனர். எங்களை கண்டுகொள்ளவில்லை.

இது தொடர்பாக, நாங்களே வேட்பாளர் ரவிக்குமாரிடம் தொலைபேசியில் கேட்டோம், விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை தி.மு.க., தான் கூட்டணியை ஒருங்கிணைக்கிறது. எதுவாக இருந்தால் தி.மு.க., அமைச்சரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என கூறி விட்டார்.

மாவட்டத்தில், காங்., கட்சிக்கென கணிசமான ஓட்டு உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பிரசாரம், செயல் வீரர்கள் கூட்டத்திற்கு அங்குள்ளவர்களை முறையாக கூப்பிடுகின்றனர். இதனால் அங்கு, பெரியளவில் கூட்டத்தை திரட்டி காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பணியாற்றுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் ஏன் அலட்சிப்படுத்துகின்றனர் என தெரியவில்லை. இது குறித்து தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்' என்கின்றனர் வேதனையுடன்...






      Dinamalar
      Follow us