/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிநீர் கிணற்றில் மிதந்தது மனிதக்கழிவு அல்ல கலெக்டர் விளக்கம்
/
குடிநீர் கிணற்றில் மிதந்தது மனிதக்கழிவு அல்ல கலெக்டர் விளக்கம்
குடிநீர் கிணற்றில் மிதந்தது மனிதக்கழிவு அல்ல கலெக்டர் விளக்கம்
குடிநீர் கிணற்றில் மிதந்தது மனிதக்கழிவு அல்ல கலெக்டர் விளக்கம்
ADDED : மே 15, 2024 08:43 PM

விக்கிரவாண்டி:விழுப்புரம் அடுத்த கஞ்சனுார் ஊராட்சியை சேர்ந்த கே.ஆர்.பாளையம் கிராம மக்களுக்கு, அப்பகுதியில் உள்ள திறந்தவௌி கிணற்றில் இருந்து மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியில் ஏற்றி குடிநீர் வழங்கப்படுகிறது.
நேற்று காலை 7:00 மணிக்கு தண்ணீர் திறந்து விடச் சென்ற டேங்க் ஆபரேட்டர் கன்னியப்பன், கிணற்று நீரில் மலம் கலந்துள்ளதாக கூறியதால் கிராமத்தில் பரபரப்பு நிலவியது.
தகவலறிந்த கூடுதல் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஆர்.டி.ஓ., ஷாகுல் ஹமீது, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விக்னேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று கிணற்றை பார்வையிட்டு விசாரித்தனர்.
ஆய்வில் கிணற்றில் மிதந்தது தேனடை என்பதை அதிகாரிகள் உறுதி செய்து, அதை எடுத்து காண்பித்ததால், கிராம மக்கள் சமாதானம் அடைந்தனர். எனினும், கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்து, சுத்தப்படுத்தினர்.