ADDED : ஆக 16, 2024 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கணவர் காணாமல் போனது குறித்து மனைவி போலீசில் புகாரளித்தார்.
விழுப்புரம் அடுத்த சகாதேவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ரத்தினவேல், 45; கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா, 39; இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.
குடிப்பழக்கம் உள்ள ரத்தினவேல், கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து, வளவனூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சங்கீதா போலீசில் புகாரளித்தார்.
இது குறித்து, வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

