ADDED : செப் 09, 2024 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மனைவி விவாகரத்து பெற்று சென்றதால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 38; சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி அன்பரசி, 35; இருவருக்குமிடையே குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், அன்பரசி விவாகரத்து பெற்று, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனால், தனிமையில் மனமுடைந்த நிலையில் இருந்த பார்த்திபன், நேற்று தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.