ADDED : பிப் 26, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் தொடர்ந்தனுார் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு, குட்கா விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மனைவி கனகவள்ளி, 39; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ 140 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.