sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

/

பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்


ADDED : ஏப் 08, 2024 06:18 AM

Google News

ADDED : ஏப் 08, 2024 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில், வீடு தேடி பூத் சிலிப் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர். தேர்தலில் பொதுமக்கள் ஓட்டுப்பதிவு செய்வதற்காக, இறுதி செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு, பூத் சிலிப் எனப்படும், வாக்காளர் அடையாள சீட்டு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,966 ஓட்டுச்சாவடி பகுதியிலும், அந்தந்த பகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மூலம், தேர்தல் ஆணையத்தின் மூலம் அச்சிட்டு வழங்கப்பட்ட வாக்காளர் அடையாளச் சீட்டு வழங்கும் பணி கடந்த 1ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில், 8,28,550 ஆண் வாக்காளர்களுக்கும், 8,49,781 பெண் வாக்களார்களுக்கும், 220 திருநங்கையர்கள் என மொத்தம் 16 லட்சத்து 78 ஆயிரத்து 551 வாக்காளர்களுக்கும், பூத் சிலிப் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதனை, 1966 ஓட்டுச்சாவடி பகுதியிலும், அலுவலர்கள் வீட்டிற்கு சென்று சரிபார்த்து வழங்கி வருகின்றனர்.

விழுப்புரம் நகர்ப்புறங்களில் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்கள் சிலர், தங்களுக்கு பூத் சிலிப் கேட்டும், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறன் வாக்காளர்கள், தங்களுக்கு தபால் ஓட்டு விண்ணப்பம் வரவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் நாளைக்கு 6 நாளுக்கு முன்பே, இப்பணிகளை முடிக்க வேண்டும், கண்டிப்பாக வீடு தேடி வழங்க வேண்டும் என கூறியுள்ளதால், அவசர, அவசரமாக பூத் சிலிப் விநியோகத்தை ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us