ADDED : ஏப் 05, 2024 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்றவர் இறந்தார்.
திருவெண்ணெய்நல்லுார், அணைக்கட்டு சாலை பகுதியைச் சேர்ந்தவர் குமார், 47; கூலித்தொழிலாளி. இவர் கடந்த 29ம் தேதி காலை 9:00 மணியளவில் அவரது வீட்டின் மாடிக்கு சென்று துணிகளை காய வைத்தபோது அருகாமையில் சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் துணி உரசி மின்சாரம் தாக்கியது.
அதில் படுகாயமடைந்த குமார், புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று முன்தினம் இரவு இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

