நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் பிரகாஷ், 33; திருமணமானவர். கோயம்பேட்டில் சுமை துாக்கும் கூலித் தொழிலாளி. இவர், கடன் தொல்லையால் மனமுடைந்த நிலையில் இருந்தவர், நேற்று, வீட்டின் அருகே உள்ள மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

