விழுப்புரம்: விழுப்புரத்தில் இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம், கே.கே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் மகள் ராஜேஸ்வரி, 20; இவர், பிளஸ் 2 படித்து முடித்துவிட்டு, தனியார் கிளினிக்கில் 6 மாதமாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 12ம் தேதி வேலைக்குச் சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஒரு வழக்கு
விழுப்புரம் தக்கா தெருவைச் சேர்ந்தவர் அக்பர், 43; கார் டிரைவர். அவரது மனைவி அபுருன்னிஷா, 30; திருமணமாகி, 2 பிள்ளைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மதகடிப்பட்டு தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற அபுருன்னிஷா, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.