/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வாலிபர் கைது
/
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசிய வாலிபர் கைது
ADDED : பிப் 22, 2025 01:49 AM

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில், 2024 நவ., 30ல், 'பெஞ்சல்' புயல் மழை பாதிப்பால், இருவேல்பட்டு கிராம மக்கள் டிச., 3ல் அதிகாரிகளை கண்டித்து திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பேச்சு நடத்த வந்த அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரை கிராம மக்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதம் செய்ததோடு, அமைச்சர் உள்ளிட்டோர் மீது சேற்றை வாரி வீசினர்.
அமைச்சர், அதிகாரிகளை திட்டி, சேற்றை வாரி வீசி மிரட்டல் விடுத்து, பணி செய்ய விடாமல் தடுத்ததாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், 24, அவரது உறவினர் விஜயராணி ஆகியோர் மீது திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்தனர். தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார், விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விஜயராணியை தேடி வருகின்றனர்.

