/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தச்சு தொழிலாளி கொலை வழக்கில் உ.பி.,யில் பதுங்கிய வாலிபர் கைது
/
தச்சு தொழிலாளி கொலை வழக்கில் உ.பி.,யில் பதுங்கிய வாலிபர் கைது
தச்சு தொழிலாளி கொலை வழக்கில் உ.பி.,யில் பதுங்கிய வாலிபர் கைது
தச்சு தொழிலாளி கொலை வழக்கில் உ.பி.,யில் பதுங்கிய வாலிபர் கைது
ADDED : செப் 01, 2024 04:01 AM

மயிலம் : தச்சு தொழிலாளியை கொலை செய்துவிட்டு உ.பி.,யில் தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் அடுத்த தென்பசார் கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்துராமன்,60; இளங்கோவன்,55; சகோதரர்களான இவர்களுக்குள், வீட்டு மனை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 23ம் தேதி முத்துராமன் வீட்டில் வாசற்கால் வைக்க தச்சர்கள் திண்டிவனம் மன்னார்சாமி கோவில் தெரு தட்சணாமூர்த்தி,60; அன்னம்புத்துார் ஆறுமுகம்,47; ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இளங்கோவன் மகன் இளவரசன்,24; யாரைக் கேட்டு இங்கு மர வேலை செய்கிறீர்கள் எனக் கேட்டு இருவரையும் உளியால் தாக்கினார். அதில் படுகாயமடைந்து ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட தட்சணாமூர்த்தி கடந்த 27ம் தேதி இறந்தார்.
இதுகுறித்து மயிலம் இன்ஸ்பெக்டர் கமலஹாசன் வழக்கு பதிந்து, உத்தரபிரதேச மாநிலத்தில் பதுங்கியிருந்த இளவரசனை தனிப்படை போலீசார் கடந்த 29ம் தேதி கைது செய்து, நேற்று மயிலத்திற்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.