/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
ADDED : பிப் 26, 2025 05:26 AM

விழுப்புரம்: செஞ்சியில் மணல் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
செஞ்சி பகுதியில் உள்ள சங்கராபரணி, மணியம்பட்டு ஆற்றில் செஞ்சி போலீசார் கடந்த ஜனவரி 25ம் தேதி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்றில் இருந்து லாரி, டிராக்டர்களில் மணல் திருடிய திண்டிவனம், தீர்த்தகுளம் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜா (எ) மருவூர் ராஜா, 40; என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இவர் மீது, இதே காவல் நிலையத்தில் மணல் திருட்டு வழக்குகள் உள்ளது. ராஜாவின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், நேற்று ராஜாவை செஞ்சி போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.