/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரத்தில் மண்டல விளையாட்டுப் போட்டிகள்
/
விழுப்புரத்தில் மண்டல விளையாட்டுப் போட்டிகள்
ADDED : ஆக 17, 2024 03:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில், விழுப்புரத்தில் மண்டல விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.
விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளியில், எறிப்பந்து, பூப்பந்து, கைப்பந்து, 14,17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான போட்டிகளை, ஜெயேந்திரா பள்ளியின் செயலாளர் ஜனார்த்தனன், துவக்கி வைத்தார்.
இப்போட்டிகளில் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவிகள், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளை எடப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் செய்திருந்தனர்.

