/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
/
பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ADDED : மே 15, 2025 02:41 AM

விழுப்புரம்: விழுப்புரத்தில், பெண்ணை காதலித்து ஏமாற்றிய வாலிபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் குமரேசன்,36; இவர், கடந்த 2016ம் ஆண்டு, கோலியனுாரை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கு, மொபைலில் மிஸ்டு கால் கொடுத்தார். இதன் மூலம் இருவரும் பேசி பழகினர். அப்பெண் திண்டிவனத்தில் உள்ள கல்லுாரிக்கு செல்லும்போது, குமரேசன் அங்கு சென்று அவரோடு பழகி காதலித்துள்ளார்.
குமரேசன் அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகினார். இதனால், கடந்த 2018ம் ஆண்டு அப்பெண் கர்ப்பமானார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளக்கூறிய போது, குமரேசன் மறுத்தார்.
பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் குமரேசன் மீது பாலியல் பலாத்கார பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாற்றப்பட்ட குமரேசனுக்கு, பாலியல் பலாத்கார பிரிவின் கீழ், 10 ஆண்டு சிறை தண்டனையும், திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய பிரிவின் கீழ், 6 மாதம் தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சங்கீதா ஆஜராகினார்.