பா.ஜ.,வில் இருந்து விலகி 100 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
பா.ஜ.,வில் இருந்து விலகி 100 பேர் தி.மு.க.,வில் ஐக்கியம்
UPDATED : நவ 19, 2026 05:52 PM
ADDED : நவ 19, 2026 05:52 PM

விழுப்புரம்: பா.ஜ., நகர தலைவர் தலைமையில் 100 பேர், அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.,வில் இணைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், வானுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட, கோட்டக்குப்பம் பா.ஜ., நகர தலைவர் கோபிநாத் தலைமையில் 100 பேர், அக்கட்சியிலிருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தனர்.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.,வில் இருந்து விலகி வந்த நகர தலைவர் கோபிநாத் உள்ளிட்டோர், லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர். தி.மு.க.,வில் இணைந்த பா.ஜ., நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து, லட்சுமணன் வரவேற்றார்.
இந்நிகழ்வின்போது, தி.மு.க., மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், கோட்டக்குப்பம் நகர செயலாளர் ஜெயமூர்த்தி, பேரூராட்சி செயலாளர் ஜீவா, நகர கவுன்சிலர் மணவாளன், விழுப்புரம் வார்டு செயலாளர் தங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அன்பரசு, பிடாகம் ராஜா, ராம், சேகர், விஜயரங்கன், எழுமலை, பழனி, ராஜி உள்ளிட்ட கோட்டக்குப்பம் வார்டு நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
