தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வுக்கூட்டம்

வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வுக்கூட்டம்

வளர்ச்சித் திட்ட பணிகள் ஆய்வுக்கூட்டம்


UPDATED : நவ 19, 2026 05:52 PM

ADDED : நவ 19, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 19, 2026 05:52 PM ADDED : நவ 19, 2026 05:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.

இதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் பேரூராட்சிகள் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் வினியோகம், பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை, உட்கட்டமைப்பு மேம்பாடு, நகர்ப்புறப் பசுமை மேம்பாட்டு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், புதிய கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துவது, நகர்புற பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகள், விலங்குகள் பிறப்பு கட்டுப்பாடு மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி நடவடிக்கை விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்டத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். திடக்கழிவுகளை வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலேயே மக்கும், மக்காத கழிவுகளாக பிரித்துச் சேகரிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

அப்போது, மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநர் லட்சுமி, பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us