/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவு பசுமைக் குடில் செல்பி பாயிண்ட்
/
100 சதவீதம் ஓட்டுப்பதிவு பசுமைக் குடில் செல்பி பாயிண்ட்
100 சதவீதம் ஓட்டுப்பதிவு பசுமைக் குடில் செல்பி பாயிண்ட்
100 சதவீதம் ஓட்டுப்பதிவு பசுமைக் குடில் செல்பி பாயிண்ட்
ADDED : மார் 18, 2024 03:32 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வித்யாசமான முறையில் பசுமைக் குடில் செல்பி பாயிண்ட் அமைத்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், வரும் லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிப்பதை வலியுறுத்தும் விதமாக, விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீரூற்று பகுதி அருகே பசுமைக் குடில் வாக்காளர் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்காளர் விழிப்புணர்வு குடிலை கலெக்டர் பழனி பார்வையிட்டு, ஒரு விரலை உயர்த்தி செல்பி எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
பொது மக்கள், 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என இதன் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.