/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்கு பூஜை
/
ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்கு பூஜை
ADDED : பிப் 16, 2026 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள ஆதிவாலீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியையொட்டி 1008 சங்கு பூஜை நடந்தது.
மகா சிவாரத்திரியையொட்டி நேற்று மாலை 4:00 மணிக்கு நான்கு கால பூஜை துவங்கியது. முன்னதாக, காலையில் கோ பூஜை நடந்தது. முதல்கால பூஜை இரவு 8:00 மணிக்கு துவங்கியது.
தொடர்ந்து நள்ளிரவு 12:00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், லிங்கோத் பவர் பூஜையும், வேள்வி வழிபாட்டோடு 1008 சங்கு பூஜையும் நடந்தது. அதிகாலை 2:00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 4:00 மணிக்கு நான்காம் கால பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

