sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 சட்டசபை பொதுத் தேர்தல் பணியில்...10,395 பேர்! மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

/

 சட்டசபை பொதுத் தேர்தல் பணியில்...10,395 பேர்! மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

 சட்டசபை பொதுத் தேர்தல் பணியில்...10,395 பேர்! மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்

 சட்டசபை பொதுத் தேர்தல் பணியில்...10,395 பேர்! மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்


ADDED : மார் 17, 2026 04:45 AM

Google News

ADDED : மார் 17, 2026 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் பணியில் 10 ஆயிரத்து 395 பேர் ஈடுபடுகின்றனர் என மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

சட்டசபை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை வரும் மே 4ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

இதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முன்தினம் மாலை 4:00 மணி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று, மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான், நிருபர்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் 2,166 ஓட்டுச்சாவடிகள் மற்றும் 1,138 ஓட்டுச்சாவடி அமைவிடங்கள் உள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி 23ம் தேதி வெளியிட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, மா வட்டத்தில், 7 லட்சத்து 83 ஆயிரத்து 228 ஆண் வாக்காளர்கள், 8 லட்சத்து 3 ஆயிரத்து 154 பெண் வாக்காளர்கள், 211 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உட்பட 15 லட்சத்து 86 ஆயிரத்து 653 வாக்காளர்கள் உள்ளனர்.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 9 பறக்கும் படை குழுவும், 9 நிலையான கண்காணிப்பு குழுவும், 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு பறக்கும் படை குழுவில், கண்காணிப்பு அலுவலர், ஆயுதம் தாங்கிய போலீஸ் மற்றும் வீடியோகிராபர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் பணிகளைக் கண்காணிக்க 20 பொறுப்பு அலுவலர்கள் உட்பட 10 ஆயிரத்து 39௫ ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டு சென்றால் உரிய ஆவணங்களோடு கொண்டு செல்ல வேண்டும்.

மாவட்டத்தில் 9 பிற மாநில எல்லை பகுதி சோதனைச் சாவடிகளும், 9 பிற மாவட்ட எல்லைப் பகுதி சோதனைச் சாவடிகளும், 5 மாவட்ட பகுதிகளில் சோதனைச் சாவடிகள் என மொத்தம் 23 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்படுகிறது.

பொதுத்தேர்தல் தொடர்பான புகார்களை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 7019 மற்றும் 1950 எண்ணிற்கு தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், 5க்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வசதிக்காக உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பறக்கும் படை சோதனையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, பணம் மற்றும் பரிசு பொருள் கொண்டு செல்லும் மக்களிடம் தேர்தல் நடத்தை விதிக ளை தெளிவாக கூறும்படியும், கடினமாக நடந்து கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிக பணம் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் அனுப்புவதை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டத்தில், 251 பேர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர்.

இதில், தேர்தல் நடத்தை விதியையொட்டி, 200 துப்பாக்கிகள் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள துப்பாக்கிகளும் பெறப்பட்டு வருகிறது.

இவ்வாறு மாவட்ட தேர்தல் அதிகாரி கூறினார்.

எஸ்.பி., சாய்பிரனித், மாவட்ட வருவாய் அலுவலர் அ ரிதாஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜான்சிராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us