/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குறைகேட்புக் கூட்டம் ரத்து பெட்டியில் மனுக்கள்
/
குறைகேட்புக் கூட்டம் ரத்து பெட்டியில் மனுக்கள்
ADDED : மார் 17, 2026 04:46 AM

விழுப்புரம்: தேர்தல் நடத்தை விதிமுறையையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் மனுக்களை பெட்டியில் போட்டனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்தப்படும். கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக அளித்து வந்தனர். இந்நிலையில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டு, அடுத்த அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மனுக்களை போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து நேற்று பொதுமக்கள் தங்கள் மனுக்களை பெட்டியில் போட்டு விட்டுச் சென்றனர்.

