/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சிவ, விஷ்ணு கோவிலில் 108 விளக்கு பூஜை
/
சிவ, விஷ்ணு கோவிலில் 108 விளக்கு பூஜை
ADDED : செப் 28, 2025 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: சிவ, விஷ்ணு கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு, 108 விளக்கு பூஜை நடந்தது.
விழுப்புரம், கோவிந்தசாமி நகர் சிவ, விஷ்ணு கோவிலில் கடந்த, 21ம் தேதி நவராத்திரி விழா துவங்கியது. அன்று, லலிதா சஹஸ்ரநாம ேஹாமம் மற்றும் துர்க்கைக்கு, 54 லிட்டர் பாலாபிஷேகம், கொலு பொம்மைகள் வைத்தல் நடந்தது.
தொடர்ந்து, நேற்று மாலை சாந்த காளியம்மன் அலங்காரம் மற்றும், 108 விளக்கு பூஜை நடந்தது. இதில், பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
ஏற்பாடுகளை அமிர்தகணபதி அறக்கட்டளை நிறுவனர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.