/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
1,296 டன் உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் வந்தது
/
1,296 டன் உர மூட்டைகள் முண்டியம்பாக்கம் வந்தது
ADDED : அக் 29, 2025 07:53 AM
விழுப்புரம்: துாத்துக்குடியில் இருந்து சரக்கு ரயில் மூலம் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு 1,296 டன் உர மூட்டைகள், நேற்று வந்தடைந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது சம்பா பருவ நெல், உளுந்து, வேர்க்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிகளுக்கு உரங்கள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு, விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், துாத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து 724.5 டன் யூரியா, 191 டன் டி.ஏ.பி., மற்றும் 380 டன் காம்ப்ளக்ஸ் உர மூட்டைகள், விழுப்புரம் மாவட்டத்திற்கு வர வழைக்கப்பட்டது. இந்த உர மூட்டைகள் சரக்கு ரயில் மூலம் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது.
இவற்றை வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் உடனிருந்தார்.

