/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
13 சவரன் நகை மோசடி: விழுப்புரத்தில் இருவர் கைது
/
13 சவரன் நகை மோசடி: விழுப்புரத்தில் இருவர் கைது
ADDED : மே 17, 2025 12:27 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் நண்பரிடம் 13 சவரன் நகை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் முத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் சூர்யா, 28; அதே பகுதியை சேர்ந்தவர் தேசிங்கு மகன் பன்னீர்செல்வம், 27; நகை செய்யும் தொழிலாளர்கள். இருவரும் நேற்று முன்தினம், விழுப்புரம் குபேர் தெருவை சேர்ந்த சக தொழிலாளி குமார் மகன் அருண்குமார், 28; என்பவரிடம், 13 சவரன் சில்லரை புதிய நகைகளை வாங்கிக்கொண்டு, அதனை ஒரு வியாபாரியிடம் மாடல் காண்பித்து, புதிய நகை செய்யும் ஆர்டர் வாங்கி தருவதாக கூறி, எடுத்துச் சென்றனர்.
மாடல் காட்டுவதற்கு எடுத்துச்சென்ற நகைகளை திருப்பித் தராமல், சூர்யா, பன்னீர்செல்வம் இருவரும் செப்பு கலந்த நகை பார்சலை கொடுத்து, அருண்குமாரை ஏமாற்றியுள்ளனர். இது குறித்து, அருண்குமார் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார், மோசடி வழக்கு பதிந்து, சூர்யா, பன்னீர்செல்வம் ஆகியோரை கைது செய்தனர்.