/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திருட்டு வழக்கில் 18 பேர் கைது; எஸ்.பி., அலுவலகம் தகவல்
/
திருட்டு வழக்கில் 18 பேர் கைது; எஸ்.பி., அலுவலகம் தகவல்
திருட்டு வழக்கில் 18 பேர் கைது; எஸ்.பி., அலுவலகம் தகவல்
திருட்டு வழக்கில் 18 பேர் கைது; எஸ்.பி., அலுவலகம் தகவல்
ADDED : பிப் 06, 2025 06:44 AM

விழுப்புரம்; விழுப்புரம் நகரில் நடந்த திருட்டு சம்பவங்களில் 18 பேரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விழுப்புரம் நகர பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடப்பது சம்பந்தமாக, தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இந்நிலையில், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
விழுப்புரம் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட சாலாமேடு, என்.ஜி.ஜி.ஓ., நகர், பாண்டியன் நகர், தந்தை பெரியார் நகர் பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் இரவு நேரங்களில் திருட்டு சம்பந்தமாக 14 வழக்குகளில் 10 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் 75 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வழப்பறி வழக்குகளில் 8 பேர் கைது செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள், தங்கள் வீட்டை பூட்டி வெளியூர் செல்லும் போது போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவிக்க வேண்டும். சி.சி.டி.வி., பொருத்த வேண்டும். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.